முகப்பு
சிவகங்கை

திருப்புவனத்தில் வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநர் ஆய்வு

திருப்புவனத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:38 AM
பகிர்:

திருப்புவனத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் காஞ்சனா டி.புளியங்குளம் ஊராட்சியில் பிரதமர் நிதியில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்புவனம் பேரூராட்சியில் குப்பைகளை இயந்திரம் மூலம் தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டார். பழையனூர் கிராமத்திலிருந்து ஓடாத்தூர் செல்லும் வழியில் உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டும் இடத்தை பார்வையிட்டு,  ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருப்புவனம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகாங்கீர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஏழிசைசெல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.