முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே  கல்லூரி மாணவர் கொலை: 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர்  கொலை வழக்கில் நால்வரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:36 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர்  கொலை வழக்கில் நால்வரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த சிலையப்பன் மகன் கருப்பையா (21).  இவர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.  
கடந்த ஏப்.2 ஆம் தேதி மாலை கருப்பையா தனது நண்பர்கள் கார்த்தி(21), ஸ்ரீராம்(23) ஆகியோருடன் அதே பகுதியில்  உள்ள ஊருணியில் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது  லெவின்சிந்தா(18),  அசோக்குமார்(21),   பிரபாகரன்(21),  இந்திரகண்ணன்(21),  அரவிந்த்(21), ஆனையடிவயலைச் சேர்ந்த  பாலமுருகன்(22)ஆகிய 6 பேரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது கருப்பையா 
தரப்பினருக்கும், லெனின் சிந்தா தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  லெனின் சிந்தா தரப்பைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், கத்தியால் கருப்பையாவின் 
தலையில் குத்தியுள்ளார். 
மற்றவர்கள் கார்த்திக்கையும், ஸ்ரீராமையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். 
இதில் படுகாயமடைந்த கருப்பையா,கார்த்திக், ஸ்ரீராம் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கருப்பையா தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
 இதுகுறித்து ஆறாவயல் போலீஸார் வழக்குப்பதிந்து அசோக்குமார், பிரபாகரன், இந்திரகண்ணன், பாலமுருகன் ஆகிய நான்கு பேரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். 
 இந்த வழக்கில்  தலைமறைவாக உள்ள லெவின்சிந்தா, அரவிந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.