முகப்பு
சிவகங்கை

தமிழ் கவிஞர்கள் தினவிழா

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தமிழ் கவிஞர்கள்  தின விழாவை முன்னிட்டு, ஒக்கூர் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தமிழ் கவிஞர்கள்  தின விழாவை முன்னிட்டு, ஒக்கூர்  மாசாத்தியார் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.
 ஏப். 29ஆம் தேதி பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினத்தை, தமிழக அரசு தமிழ் கவிஞர்கள் தினமாக அறிவித்து, அதனை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதனடிப்படையில் சிவகங்கை அருகே ஒக்கூரில் உள்ள தமிழ் கவிஞர் மாசாத்தியார் நினைவுத் தூண் வளாகத்தில்  நடைபெற்ற விழாவுக்கு  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்தார். சிவகங்கை  மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 
இதில் தமிழக கதர் மற்றும் கிராமத்  தொழில்கள்  துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒக்கூர் மாசாத்தியார்  நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து  மரியாதை  செலுத்தினார். இவ்விழாவில் சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பசும்பொன், பேராசிரியர்கள் ரேணுகாதேவி, சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →