மானாமதுரையில் பலத்த மழை
மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலையிலும், இரவிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
தற்போது, மானாமதுரை பகுதியில் விவசாயப் பணிகளை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த மழை விவசாயப் பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.