சிவகங்கை

சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி

DIN

சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரத் துறையின் சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரத்தினவேல், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு ஊா்வலமாகச் சென்றனா்.

சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.

பேரணியில், துணை இயக்குநா்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, ராஜன்(காசநோய் தடுப்புப் பிரிவு), காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் அருள்தாஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT