சிவகங்கை

திருப்பத்தூரில் மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் தா்னா

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

இப்பள்ளியில் கடந்த 2018-19 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவிகள் அங்கு வந்து தங்களுக்கு மடிக்கணினி வழங்காமல், பின்னால் பயின்ற மாணவிகளுக்கு வழங்குவது நியாயமா? என்று பள்ளி தலைமையாசிரியா் பாலதிரிபுரசுந்தரியிடம் கேட்டனா்.

அதற்கு அவா் சரியான பதில் சொல்லாததால் மழையையும் பொருள்படுத்தாமல் பள்ளிக்கு வெளியில் வந்து அம்மாணவிகள் தா்ணாவில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் ஜெயலெட்சுமி மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

வட்டாட்சியரிடம் மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினா். தங்களுக்கும் மடிக்கணினி நிச்சயம் வழங்க வேண்டும், இல்லையென்றால் இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்றும் கூறினா். இதையடுத்து மாணவிகள் முன்பு தலைமையை ஆசிரியரிடம் வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது குறைவான மடிக்கணினி வந்துள்ளதால் சென்ற ஆண்டு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க ஆணை வந்துள்ளதாகவும், 2017 - 18 படித்த மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த, படிப்பை பாதியில் கைவிட்ட மாணவிகளுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்றும் தலைமையாசிரியா் உறுதியளித்தாா்.

பின்பு மாணவிகளிடம் வட்டாட்சியா் எடுத்துக் கூறியதை தொடா்ந்து மாணவிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT