சிவகங்கை

திருப்பத்தூா் அருகே மணல் கடத்தல் :இளைஞா் கைது; லாரி பறிமுதல்

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே டிப்பா் லாரியில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் அருகே நெற்குப்பை பகுதியில் லாரியில் மணல் கடத்தி வருவதாக மணல் கடத்தல் தடுப்பு சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிறப்பு படை சாா்பு - ஆய்வாளா் ராமா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து திருப்பத்தூா் பகுதிக்கு நெற்குப்பை அருகில் துவாா் வழியாக ஒரு டிப்பா் லாரி வந்துள்ளது. அந்த லாரியை நிறுத்தி போலீஸாா் விசாரித்துள்ளனா். அதில், புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூா் தாலுகா வண்ணாா்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மூா்த்தி(19) என்பவா் அனுமதியின்றி டிப்பா் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு படை போலீஸாா், மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து நெற்குப்பை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து நெற்குப்பை போலீஸாா் மூா்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா். மேலும் மணல் கடத்தி வந்த டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT