சிவகங்கை

காரைக்குடியில் பலத்த மழை

DIN

காரைக் குடியில் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரைக்குடியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தால்  மக்கள் அவதிப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டியது. இந்நிலையில் மாலையில் கருமேகம் திரண்டு காற்று வீசியது. அதைத்தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு லேசான மழையாகப் பெய்யத் தொடங்கி மாலை 6.45 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. இந்த மழையின் காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து: காங். பொதுச் செயலாளர்!

SCROLL FOR NEXT