சிவகங்கை

உழவர் நண்பர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

DIN

சிவகங்கை வட்டார உழவர் நண்பர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி  திங்கள்கிழமை நடைபெற்றது.
 சிவகங்கையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் த.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். 
 அவர், விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம்  செயல்படுத்தப்படும் பணிகள்,உழவர் நண்பர்களின் பயன் மற்றும் பங்களிப்பு, ஏற்கெனவே செயல்பட்டு வரும் கூட்டுப்பண்ணைய திட்டங்கள், நடப்பு நிதியாண்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள கூட்டுப்பண்ணையங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து,சிவகங்கை வேளாண்மை அலுவலர் மு.ஜைனுல்பெளஜியாராணி, வேளாண்மைத் துறையின் திட்டங்களான சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம், கோடை கால உழவு, மாற்றுப் பயிர், சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக் கூறினார். 
 இக்கூட்டத்தில் சிவகங்கை வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT