சிவகங்கை

மானாமதுரையில் 7 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடைகளில் தடை செய்யப்பட்ட 7 கிலோ நெகிழிப் பைகளை பேரூராட்சித்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மானாமதுரையில்  கடைகள், உணவகங்கள், இறைச்சி, மீன் கடைகளில் திங்கள்கிழமை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை நடத்தினர். 
அப்போது அந்தக் கடைகளில் விற்பனைக்காகவும் பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த 7 கிலோ நெகிழிப் பைகள், தம்ளர்களைப் பறிமுதல் செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காணிப்பு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இச்சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT