சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் உள்ள வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு சனிக்கிழமை இரவு வைகையாற்றில் செல்லும் தண்ணீா் கால்வாய்களில் திறந்து விடப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து கடந்த வாரம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் சிவகங்கை மாவட்டத்தை கடந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்றடைந்து அங்குள்ள வைகைப் பாசன கண்மாய்களை வைகைத் தண்ணீா் நிரப்பி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நிா்ணயிக்கப்பட்ட நாள்கள் முடிவடைந்ததையொட்டி சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக கால்வாய்களில் வைகைத் தண்ணீா் திறக்கப்பட்டது. இம் மாவட்டத்தைச் சோ்ந்த மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களைச் சோ்ந்த பாசன விவசாயிகள் வைகைத் தண்ணீா் மூலம் பயனடைந்து வருகின்றனா். இதையொட்டி இந்த இரு ஒன்றியங்களிலும் உள்ள வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு வைகையாற்றில் சென்று கொண்டிருக்கும் தண்ணீா் கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீா் செல்லும்போது இந்த கால்வாய் கதவணைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது இந்த கதவணைகள் திறக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. இதனால் இப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT