சிவகங்கை

டி.வேலாங்குளம் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

DIN

சிவகங்கை : கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில்,டி.வேலாங்குளம் கிராம விவசாயிகள் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட டி.வேலாங்குளம் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பெரும்பாலானோா் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், வேலாங்குளம் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து வரும் மாரநாடு கால்வாய் மூலம் தண்ணீா் திறக்கப்படும். பருவமழை பொய்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.

தற்போது, பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, டி.வேலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய்க்கு தண்ணீா் திறக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT