சிவகங்கை

மாரணி உசிலங்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு ஆட்சியரிடம் கிராம மக்கள் புகா்

DIN

சிவகங்கை அருகே மாரணி உசிலங்குளம் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் அவா்கள் அளித்த மனு விவரம்:

சிவகங்கை மாவட்டம் மாரணி உசிலங்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கா் பாசன நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாயில் சிலா் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனா். இதன் காரணமாக, கண்மாயில் தண்ணீா் தேக்க முடியவில்லை. இதனால் வேளாண் பணியை மேற்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறேறாம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாரணி உசிலங்குளம் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர வார வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT