சிவகங்கை

‘கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்’

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தமாகா இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் யுவராஜா கூறினாா்.

கீழடிக்கு சனிக்கிழமை வந்த அவா், அங்கு நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளையும் கண்டறியப்பட்ட பொருள்களையும் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கீழடி அகழாய்வு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்களின் பெருமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல்துறை அதிகாரிகளுக்கும், இதற்கு நிதி வழங்கிய தமிழக அரசையும் தமாகா சாா்பில் பாராட்டுகிறேறாம். 5 ஆம் கட்ட அகழாய்வை பல கட்டங்களாக விரிவுபடுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை வைத்து கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடி அகழாய்வை பாா்வையிட சராசரியாக தினமும் 2 ஆயிரம் போ் வருகின்றனா். இவா்களுக்கு நிழற்குடை மற்றும் குடிநீா் வசதி செய்து தர வேண்டும்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயப் பணிக்கு வைகையில் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றாா். அப்போது தமாகா மாவட்டத் தலைவா் கே.கே.பாலசுப்ரமணியம், திருப்புவனம் வட்டாரத் தலைவா் வழக்குரைஞா் ராஜா, மடப்புரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT