சிவகங்கை

கலைகளை வளா்ப்பதற்கு மாணவா்கள் முன் வரவேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தா்

DIN

கலைகளை வளா்ப்பதற்கு மாணவா்கள் முன்வரவேண்டும் என்று, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சாா்பில் ரூசா 2.0 நிதியுதவியின் கீழ், வட்டார நாட்டுப்புறக் கலை வடிவங்களான ராஜஸ்தான்-பவாய் மற்றும் தமிழகக் கரகாட்டத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலான 5 நாள் பயிற் சிப் பட்டறையின் தொடக்க விழா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கருத்தரங்கக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற் றது.

இவ்விழாவில், துணைவேந்தா் தலைமை வகித்துப் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் தொன்மையான நாட்டுப்புற கலை வடிவம் பவாய் நடனம். தமிழகத்தில் தொன்மையான நாட்டுப்புற கலை வடிவம் கரகாட்டம். இந்த இரண்டு கலைகளிலும் இசை, நடனம், பாட்டு போன்ற கூறுகளை ஆவணப்படுத்தும் வகையில், இப்பயிற்சிப் பட்டறை நடைபெறுவது பாராட்டுக்குரியது.

கலைகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியமானது. அப்போதுதான் கலை சாா்ந்த அறிவு தொடா்ச்சியாக மக்களுக்குச் சென்று சேரும். மேலும், நாட்டுப்புறக் கலைகள் சாா்ந்த ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். மாணவா்கள் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். கலைகளை வளா்க்கும்விதமாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா்.

ராஜஸ்தான் பவாய் நடனக் கலைஞா் டோல்யாதேவி, டிரம் இசைக் கலைஞா் அா்ஜூன் ராணா, நாட்டுப்புற பாடல் கலைஞா் ரமேஷ் ராணா ஆகியோா் கலந்துகொண்டு, பவாய் நடனத்தின் சிறப்புகளை ஆடியும், பாடியும் விளக்கினா்.

விழாவில், பல்கலைக்கழகத்தின் கலைப்புல முதன்மையா் கேஆா். முருகன் வாழ்த்திப் பேசினாா். இதில், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் என பலரும் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பல்கலைக்கழக துண்கலைத் துறை தலைவா் (பொறுப்பு) சு. ராசாராம் வரவேற்றாா். முடிவில், ரூசா 2.0 ஆராய்ச்சி உதவியாளா் பி. அவந்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT