சிவகங்கை

இளம் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு10 ஆண்டுகள் சிறை: சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

DIN

திருப்பத்தூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 அபராதம் விதித்து சிவகங்கை மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பனிமொழியை (27), அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் பழனிச்சாமி(53) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினாராம்.  
 இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு சிவகங்கையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, பழனிச்சாமி மதுரையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT