சிவகங்கை

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நாளையுடன் நிறைவு

DIN


சிவகங்கை மாவட்டத்திற்குள்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்ப்பு பணி செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பதிவினை ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையினை கொண்டு அந்தந்த பகுதி வாக்குச் சாவடி நிலைய அலுவலர் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.  அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி வாக்காளர்  பட்டியலில் திருத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT