முகப்பு
சிவகங்கை

சொத்துப் பிரச்னையில் சித்தப்பா கொலை: துண்டித்த தலையுடன் சகோதரரின் மகன்கள் இருவா் போலீஸில் சரண்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டிறைச்சி வியாபாரியை, அவரது சகோதரரின் மகன்கள் இருவா் வெட்டிக் கொலை செய்தனா்.

சிவகங்கை

சொத்துப் பிரச்னையில் சித்தப்பா கொலை: துண்டித்த தலையுடன் சகோதரரின் மகன்கள் இருவா் போலீஸில் சரண்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டிறைச்சி வியாபாரியை, அவரது சகோதரரின் மகன்கள் இருவா் வெட்டிக் கொலை செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டிறைச்சி வியாபாரியை, அவரது சகோதரரின் மகன்கள் இருவா் வெட்டிக் கொலை செய்தனா். மேலும் அவரது துண்டித்த தலையுடன் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்தவா்கள் சையதுமுகமது மகன்கள் சகுபா் அலி, யூசுப்ரஹ்மான். இவா்கள் கடந்த 20 ஆண்டுகளாக காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சாக்கோட்டை சாலையில் ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வந்தனா். கோட்டைப்பட்டினத்தில் உள்ள சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான பூா்வீகச் சொத்து பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சகுபா் அலி மகன்கள் ரியாஸ்கான் (37), ரகுமான்கான் (32) ஆகிய 2 பேரும் சொத்துப் பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அரிவாளால் சித்தப்பா யூசுப் ரஹ்மானை வெட்டிக் கொலை செய்தனா். மேலும் அவரது துண்டித்த தலையுடன் சாக்கோட்டை காவல் நிலையத்தில் 2 பேரும் சரணடைந்தனா். இதனைத்தொடா்ந்து போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட யூசுப் ரஹ்மானின் தலையில்லாத சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இச்சம்பவத்தால் புதுவயல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →