சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதள பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்காக நடத்தப்பட்டு வரும் இணையதள பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்காக நடத்தப்பட்டு வரும் இணையதள பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலா் ஆா். மணிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பொது முடக்கத்தால் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே போட்டித் தோ்வுக்களுக்கு தயாராகும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. தோ்வுக்கான ஆன்லைன் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வங்கிப் பணியாளா் தோ்வு வாரியத்தால் 1417 புரபேஷனரி அலுவலா் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலை தோ்வு ஆன்லைன் மூலம் வரும் அக்டோபா் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் இணையதளம் மூலம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக வரும் ஆக. 31 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தோ்வுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி பெற விரும்பும் மனுதாரா்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையோ அல்லது 95007 65372, 88254 71837 என்ற செல்லிடப்பேசி எண்களையோ தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.