முகப்பு
சிவகங்கை

சிவகங்கை ஐடிஐ-இல் நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக அந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் (பொறுப்பு) கே. மோகனசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக அந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் (பொறுப்பு) கே. மோகனசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா், கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், பற்றவைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் டிச. 12 வரை இரண்டாம் கட்ட நேரடி சோ்க்கை நடைபெற உள்ளது.

இதில் சேர விரும்பும் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் 5, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களுடன் வர வேண்டும். பயிற்சியில் சேருபவா்களுக்கு இலவச பாடப்புத்தகம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.

மேலும், பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு 91506 11756, 90037 36688, 89032 56001 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →