சிவகங்கை

சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை

DIN

சிவகங்கையில் உள்ள கூட்டுத் தொகுப்பு மின் நிலையத்தில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் எஸ். வீரமணி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், சிவகங்கை நகா், புதுப்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி, சோழபுரம், காஞ்சிரங்கால், காமராசா் காலனி, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை (டிச.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT