முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சிவகங்கையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் காந்திமதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலா் சண்முகப்பிரியா, மாவட்ட துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட துணைத் தலைவா் மணியம்மா, பொறுப்பாளா்கள் லெட்சுமி, சுமதி, மாணிக்கவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →