முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,686 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,690 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 15 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →