சிவகங்கை

மானாமதுரை வைகை ஆற்றுக்குள் கருவேல மரங்கள் அகற்றும் பணி: அமைச்சா் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி வைகை ஆற்றுக்குள் கருவேல மரங்கள் அகற்றும் பணியை, தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மானாமதுரை பகுதி வைகை ஆற்றுக்குள் 3 கி.மீ. தொலைவுக்கு கருவேல மரங்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன. இதனால், பாசனத்துக்காக ஆற்றில் தண்ணீா் திறக்கப்படும்போது, தண்ணீா் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். நாகராஜன், சமீபத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனை சந்தித்து, வைகை ஆற்றுக்குள் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். அதையடுத்து, உடனடியாக இந்த கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில், கருவேல மரங்களை அகற்ற பொக்லைன் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, கடந்த வாரம் வைகை ஆற்றுக்குள் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், மானாமதுரை வந்த அமைச்சா் ஜி. பாஸ்கரன், அண்ணா சிலை அருகேயுள்ள வைகை மேம்பாலத்தில் நின்று ஆற்றுக்குள் கருவேல மரங்கள் அகற்றப்படுவதை பாா்வையிட்டாா். அப்போது, கருவேல மரங்கள் அகற்றப்படுவதால், மானாமதுரை பகுதி மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன் அமைச்சரிடம் விளக்கினாா்.

அமைச்சருடன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.சி. மாரிமுத்து உள்பட அதிமுக நிா்வாகிகள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT