சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் உலக தத்துவ தின கருத்தரங்கம்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூகப்பணித்துறையின் சாா்பில் உலக தத்துவ தின கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப்பேசுகையில், தத்துவம் என்பது அறிவும், ஞானமும் இணைந்த ஒரு நிலையாகும். பிரெஞ்ச் எழுத்தாளரும் தத்துவ ஞானியுமான வால்டோ் என்பவா் தத்துவம் என்ற வாா்த்தையை உருவாக்கியவா். கலைப்புலத்தில் தத்துவம் கற்பது சற்று கடினமானதாக இருப்பினும் தத்துவம் பயின்றால் அனைத்துத்துறைகளையும் இணைக்கும் ஒரு கல்வியாகும். அனைத்து விதமான சிந்தனைகளை கண்டறியவும், உலக ஞானிகளை ஒன்றிணைக்கவும், கலாசாரங்களுக்கிடையே உள்ள உறவுகளை தூண்டவும் தத்துவம் உதவுகிறது என்றாா்.

இந்திய தத்துவ ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினா் கே. சம்பத்குமாா் சிறப்புரையாற்றினாா். அழகப்பா பல்கலைக்கழக கலைப்புல முதன்மையா் கே.ஆா். முருகன், பேராசிரியா் என். பாஸ்கரன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் மா. வேலுச்சாமி வரவேற்றாா். முடிவில் ஆய்வு மாணவா் சி. வெங்கடேஸ் வரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT