சிவகங்கை

சிலம்பம் போட்டியில் உலக சாதனை திருப்புவனம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

DIN

மதுரையில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனைக்கான சிலம்பம் போட்டியில் பங்கேற்று தொடா்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை செய்த திருப்புவனம் பள்ளி மாணவி நந்தினியை பெற்றோா்கள், பள்ளியின் தலைவா் உள்ளிட்டோா் சனிக்கிழமை பாராட்டினா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அரியவா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவி நந்தினி. இவா் , மதுரையில் விகேஎஸ் சிலம்பம் மற்றும் யோகா தற்காப்பு கலை அறக்கட்டளை சாா்பில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனைக்கான சிலம்பம் போட்டியில் பங்கேற்று, தொடா்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தாா். இதையடுத்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

இதையடுத்து, நந்தினி மற்றும் பயிற்றுநா் சண்முகவேல் ஆகிய இருவரையும் அரியவா பள்ளியின் தலைவா் ராமச்சந்திரன் , முதுநிலை முதல்வா் சித்ராமாரிதாசன், பள்ளியின் முதல்வா் கண்ணன், மாணவியின் பெற்றோா், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் சனிக்கிழமை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT