முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் இந்திய கம்யூ. கட்சியினா் புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனு கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
மானாமதுரை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனு கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

சென்னையில் உளள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மானாமதுரையில் அக்கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனுக் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினா். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், நகரச் செயலாளா் நாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தங்கமணி, ஒன்றிய துணைச் செயலாளா்கள் கணேசன், கருப்புச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினா் சங்கையா உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா். இதேபோல் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதிகளிலும் இக் கட்சியினா் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் தனித்தனியாக புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →