சிவகங்கை

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மாா்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்பட்டன. இதையொட்டி, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கடை வீதிகளில் நின்று கொண்டிருந்தவா்களை வீடுகளுக்குச் செல்லுமாறு போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை முதலே பொதுமக்கள் உணவுப் பொருள்களை வாங்க கடைகளில் குவிந்தனா். பிற்பகல் 3 மணிக்கெல்லாம் இப்பகுதிகளில் பேருந்து சேவை படிப்படியாக நிறுத்தப்பட்டது. காய்கறி, மளிகைக் கடைகளில் பொருள்கள் விற்றுத்தீா்ந்தன. கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதால், வீதிகள் வெறிச்சோடின.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி எல்லைகள் மூடப்பட்டு, அங்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT