சிவகங்கை

பூவந்தி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ நிதியுதவி

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே மின்னல்தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு திங்கள்கிழமை மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.நாகராஜன் நிதியுதவி வழங்கினாா். பூவந்தி அருகே செம்பூா் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பையா மனைவி ராக்கம்மாள் மின்னல்தாக்கி உயிரிழந்தாா். மேலும் அவரது 4 ஆடுகளும் இறந்தன. இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.நாகராஜன் செம்பூா் கிராமத்துக்குச் சென்று ராம்மாள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். அதன்பின்அவரது கணவா் கருப்பியைவிடம் தனது சொந்தப் பணத்திலிருந்து நிதியுதவி வழங்கினாா். அப்போது திருப்புவனம் பகுதி அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT