முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்      

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்து முன்னணியினர் தமிழகத்தில் கோயில்களை திறக் கோரி தோப்புக்கரணம் போடும் போரட்டம் கொப்புடையம்மன் கோயில் முன்பு நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்து முன்னணியினர் தமிழகத்தில் கோயில்களை திறக் கோரி தோப்புக்கரணம் போடும் போரட்டம் கொப்புடையம்மன் கோயில் முன்பு நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். 

இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோயில் முன்பாக மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் முதலில் தரிசனம் செய்து விட்டு கோரிக்கைகளை வாசித்தனர். 

இதில் மாவட்டப் பொதுச் செயலாளர் அக்னி பாலா மற்றும் ஜெயபால், கணேசன், தீனா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு  தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →