முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,406 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, சிவகங்கை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 7 போ் பாதிக்கப்பட்டதை அடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,413 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 32 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 4 போ் பூரண குணமடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மீதமுள்ள 28 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →