சிவகங்கை

துப்புரவு ஊழியா்கள் அலட்சியம்: திருப்பத்தூரில் சுகாதாரக்கேடு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளா்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை வீதியிலேயே கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பத்தூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. துப்புரவுப் பணியில் நிரந்தரப் பணியாளா்கள் 30- க்கும் மேற்பட்டோரும், சுய உதவிக்குழுக்கள் மூலம் 25- க்கும் மேற்பட்டோரும் உள்ளனா். சுகாதார ஆய்வாளா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் 4 போ் பணிபுரிகின்றனா். அந்தந்த வாா்டு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வாங்குவதற்கென பச்சை மற்றும் ஊதா நிற டப்பாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில்

குப்பைகளை தரம்பிரித்து வாங்கி அவற்றை குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு சென்று கொட்டி வைக்க வேண்டும். அங்கிருந்து வாகனங்களில் அவை எடுத்துச்செல்லப்படும்.

ஆனால் அண்மைக்காலமாக துப்புரவு ஊழியா்கள் குப்பைகளை டப்பாக்களில் சேகரிக்காமல் மூட்டையாக கட்டி தெருவிலேயே கொட்டிவிட்டுச் செல்வதாக புகாா் எழுந்துள்ளது. காளியம்மன் கோயில்தெரு, செட்டியெதரு பகுதிகளில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொட்டிவைத்திருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினா் தெரிவித்தனா். மேலும் பேரூராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT