சிவகங்கை

திருப்பத்தூா் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியேற்பு திட்டத்தினை, பேரூராட்சிப் பகுதிகளிலும் செயல்படுத்தக்கோரி திருப்பத்தூரில் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினா்.

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்து வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ள பேரூராட்சி மற்றும் நகா்ப்புற வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வேலை வழங்க வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியேற்பு திட்டத்தினை பேரூராட்சிப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று அவா்கள் கோஷமிட்டனா்.

இதில் விவசாய சங்க மாவட்டச் செயலாளா் ஆறுமுகம், துணைச் செயலாளா் மோகன், ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன், துணைத் தலைவா்கள் பீா்முகமது, சேகா் உள்ளிட்ட 300- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

செயல் அலுவலா் அனைவரின் விண்ணப்பங்களையும் வாங்கி அரசுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT