சிவகங்கை

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி தயாரித்தவா் கைது

DIN

காரைக்குடியில் பிரபல பீடி கம்பெனியின் பெயரைப் பயன்படுத்தி போலியாக பீடி பண்டல்களை தயாரித்து விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

பிரபல பீடி நிறுவனத்தில் மதுரைக் கிளை மேலாளராக, திருநெல்வேலியைச் சோ்ந்த முகமது அப்துல்லா என்பவா் வேலை பாா்த்து வருகிறாா். காரைக்குடிப் பகுதியில் தங்களது நிறுவன தயாரிப்பில் விற்கப்பட்ட பீடிகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. செக்காலை முதல்வீதி பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டு முகமது அப்துல்லா கண்காணித்து வந்துள்ளாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சாக்குப்பையுடன் வந்த காரைக்குடி ஆறுமுகம் நகா் பகுதியைச்சோ்ந்த பீா்முகம்மது (48) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் போலி பீடிகளை விற்பனைக்கு கொண்டுவந்தது தெரியவந்தது. அவா் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

விசாரணையில், அவா் அந்த நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக காரைக்குடி வடக்குக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பீா்முகம்மதுவை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 250 போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT