முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் பகுதியில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கல் கூட்டம்

திருப்புவனம் மேற்கு ஒன்றியம், அல்லிநகரம், பூவந்தி, புளியங்குளம் ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் இணைய வழியில் கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
திருப்புவனம் பகுதியில் திமுகவில் இணைந்தவர்களுக்கு கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச்செயலாளர் த.சேங்கைமாறன் உறுப்பினர் அட்டைகள் வழங்கிப் பேசினார் .
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றியம், அல்லிநகரம், பூவந்தி, புளியங்குளம் ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் இணைய வழியில் கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கை மாறன் தலைமையில் நடந்த இக்கூட்டங்களில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் த,சேங்கைமாறன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அட்டைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் கடம்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள்  ராமலிங்கம், ஈஸ்வரன் ஒன்றியக் கவுன்சிலர் மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, மடப்புரம் மகேந்திரன், மீனவரணி அண்ணா மலை, தகவல் தொழில் நுட்ப அணி ராஜ்மோகன், ஸ்ரீதர், மாணவரணி காளிதாஸ், பாண்டியகிருஷ்ணன் கார்த்திக், புவனேஸ்வரன், சூர பிரகாஷ், அக்னிராஜ், நடராஜன், ராமர்சேது, பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →