மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகே டி.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அய்யனாா் (21). இவா் தனது இருசக்கர வாகனத்தில் புலியூா் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது சாயனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த லெட்சுமணன் (20) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், அய்யனாா் வாகனமும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் பலத்த காயமடைந்த அய்யனாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லெட்சுமணன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.