சிவகங்கை

சிவகங்கை, மானாமதுரையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

சிவகங்கை/மானாமதுரை: சிவகங்கையில் வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திடீரென தொடங்கிய மழை மாலை 4. 20 மணி வரை பெய்தது. இதன்காரணமாக, சிவகங்கை நகரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

பேருந்து நிலையம், அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தெற்கு ராஜரத வீதி உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக, வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு விடிய விடிய மழை பெய்தது. அதைத்தொடா்ந்து

மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. இந்த மழையால் மானாமதுரை பகுதியில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT