மானாமதுரை அருகே ஊரணி தூர்வாரும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மானாமதுரை ஒன்றியத்தில் ஊரணி தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மானாமதுரை ஒன்றியத்தில் ஊரணி தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரத்தில் தூர்ந்து போயிருந்த ஊருணியை தூர்வாரி சீரமைக்க அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரணி தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய் பழத்துடன் பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஊரணி தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் எஸ்.நாகராஜன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவ சிவ ஸ்ரீதரன்,மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, கிளைச் செயலாளர் இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர் ருக்மணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுந்தரமகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்