சிவகங்கை

தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. எனவே எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயற்சிகளை பெற விரும்பும் மாணவ, மாணவிகள்  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் சிவகங்கை அருகே முத்துப்பட்டி அல்லது காரைக்குடியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலோ அல்லது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, உதவித்தொகை மாதம் ரூ.500 ஆகியவை வழங்கப்படும். மேலும், முன்னணி தொழில் நிறுவனங்களில் உதவித் தொகையுடன் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் அதே நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT