இளையான்குடி, மானாமதுரையில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவைக் கண்டித்தும் இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் மானாமதுரையில் தலைமை தபால் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் அண்ணாத்துரை, ராஜாமணி, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,வி.சி.க உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி நெட்டூர் அய்யாச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அழகர்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமுமுக, மமக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் புதிய வேளாண் சட்டத்தையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.