சிவகங்கை

எஸ்.கரிசல்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

DIN

எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை இரவு பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இக்கோயிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா். தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய வைபவமாக புதன்கிழமை பொங்கல் வைத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடத்தப்பட்டன.

திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனா். மதியம் கோயில் முன்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் இரவு தீச்சட்டி எடுத்து கோயிலைச் சுற்றி வந்தும் தீ மிதித்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.விழாவு ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சொ்டு எல்.பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT