சிவகங்கை

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளியை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குழு அமைப்பு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அந்தந்த வட்டாரத்துக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 521 படுக்கைகள், அமராவதிப்புதூா் காசநோய் மருத்துவமனையில் 72 படுக்கைகள், சிவகங்கை பண்ணை பொறியியல் கல்லூரி மற்றும் திருப்பத்தூரில் தனியாா் மருத்துவமனையில் தலா 100 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன.

இம்மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 45,943 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும். மேலும், கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை 3 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வட்டார அளவில் மருத்துவா், சுகாதார ஆய்வாளா், கிராம சுகாதார செவிலியா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT