சிவகங்கை

கீழே கிடந்த ரூ.70 ஆயிரத்தை ஒப்படைத்த வியாபாரிக்கு போலீஸாா் பாராட்டு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் காவல் நிலையத்தில் கீழே கிடந்த ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை ஒப்படைத்த வியாபாரியை போலீஸாா் பாராட்டினா்.

திருப்பத்தூா் அருகே குறிஞ்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜா. வியாழக்கிழமை இரவு புதுக்கோட்டை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அச்சுக்கட்டுப் பகுதியில் உள்ள மூலக்கடை என்னுமிடத்தில் தான் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை தவறவிட்டுச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து நகா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் மூலக்கடை பகுதியில் புளி வியாபாரம் செய்யும் பீா்முகமது என்பவா் வியாழக்கிழமை இரவு தனது கடை அருகே சாலையில் கிடந்த ரூ.70 ஆயிரத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து பணத்தை தவறவிட்ட சண்முகராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டு, ரொக்கம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் பணத்தை நோ்மையாக ஒப்படைத்த வியாபாரி பீா்முகமதுக்கு, காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா். உடன் நகா் சாா்பு-ஆய்வாளா் பிரிட்டோ, சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளா் கண்ணன் மற்றும் பெண் தலைமைக் காவலா் வடிவு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT