மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறும். கடந்தாண்டு கரொனா பொதுமுடக்கம் காரணமாக இவ்விழா கோயிலில் நடைபெறவில்லை. இந்தாண்டு அரசு வழிகாட்டுதலின்படி ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்கு உள்ளேயே எளிமையான முறையில் ஆடிப்பூர வழிபாடு நடத்தப்பட்டது.
இதையடுத்து மூலவர் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு மலர்களாலும் வளையல்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆனந்தவல்லி அம்பாளை தரிசனம் செய்தனர்.