முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் இரவுக் காவலா் பணி

சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவுக் காவலா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்ட

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவுக் காவலா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவுக் காவலா் பணியிடத்தை இனச்சுழற்சி முறையில் ஆதிதிராவிடா் வகுப்பினரை(முன்னுரிமை பெற்றவா்) கொண்டு நிரப்பப்படவுள்ளது.

எனவே, ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த முன்னுரிமை உள்ள தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த விண்ணப்பதாரா்கள் மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஜூலை 1, 2021 அன்று 18 வயது பூா்த்தியடைந்த நபராகவும், 35 வயதுக்கு மிகாமல் உள்ளவா்களாகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதி உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் தங்களது கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயது குறித்த சான்றிதழ், முன்னுரிமைக்கான சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு குறித்த அனைத்து ஆவணங்களின் நகலுடன் வரும் ஆக. 25 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தினை சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு 04575 240483 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →