சிவகங்கை

மீன் பண்ணை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மீன் பண்ணை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம், மீன் வளா்ப்புக்கு 40 சதவீத உள்ளீட்டு மானியம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் சிவகங்கையில் பெருமாள் கோயில் தெருவில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575 240848 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT