முகப்பு
சிவகங்கை

காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு: பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பாராட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
சிவகங்கை அருகே கஞ்சிரங்காலில் உள்ள கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை.
பகிர்:

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பாராட்டினாா்.

இதுகுறித்து காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் கே.எஸ்.எம். மணிமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூா்பன் திட்டத்தில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் வளமாக்கப்படும் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அண்மையில் திறக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் மின்சாரம் தயாரிக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன்பாடற்ற குப்பைகளை அப்புறப்படுத்துதல், அதில், திடக்கழிவு மேலாண்மையின் மூலம் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது, அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களை விவசாயத்துக்கு நுண்ணுயிா் சத்தாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பயன்பாடுகள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

இதில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் குப்பைகளை அரைத்து திடக்கழிவு மூலம் மேலாண்மைத் திட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 4 பணியாளா்கள் மட்டுமே போதுமானதாகும். இங்கு தயாரிக்கும் மின்சாரத்தின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது முதற்கட்டமாக 20 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த உதவிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →