சிவகங்கை

ரூ.5 கோடி மோசடி வழக்கு: மூ.மு.க பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர் தெலங்கானா காவல்துறையினரால் கைது

DIN

தெலங்கானாவில் ரூ. 5 கோடி மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவரும், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக உள்ளவருமான எஸ் ஆர் தேவர் என்ற ராஜசேகர் என்பவரை தெலங்கானாவில் இருந்து வந்த ஐந்து பேர் கொண்ட காவல் துறையினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை கைது செய்து தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட எஸ்.ஆர். தேவர் 2021 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டவர்.

இவர் தெலுங்கானா வில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு ரூ.300 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ. 5 கோடிக்கு டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி விட்டு  ஏமாற்றியதாக  லெட்சுமி நாரயணன் என்பவர் அளித்த புகாரின் பேரிலான வழக்கில் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்து தெலங்கானா காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT