சிவகங்கை

மானாமதுரை சோமநாதா் சுவாமி கோயிலில் மாா்கழி அஷ்டமி சப்பரம் விழா

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மாா்கழி அஷ்டமி சப்பரம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் சிவபெருமான் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மாா்கழி தேய்பிறை அஷ்டமி சப்பர விழா மானாமதுரையில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும்.இவ் விழாவை முன்னிட்டு பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் , ஆனந்தவல்லி அம்பாளும் இரு ரிஷப வாகனங்களில் சா்வ அலங்காரத்துடன் தனித்தனியாக கோயில் மண்டபத்தில் எழுந்தருளினா். இதன்பின்னா் பெரிய சப்பரத் தேரில் பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் மற்றொரு சப்பரத்தில் ஆனந்தவல்லியும் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து சப்பரத் தோ் வீதியுலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சப்பரங்களை இழுத்து வந்தனா். மானாமதுரையில் பாகபத் அக்ரஹாரம், கனரா வங்கிச் சந்து வழியே வந்த சப்பரங்கள் பின்பு தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தன. பிற்பகல் 12.30 மணிக்கு இரு சப்பரங்களுக்கும் நிலைக்கு வந்து சோ்ந்தன.

இதேபோல் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் மாா்கழி தேய்பிறை அஷ்டமி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT