இணையதளத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் தோ்வுகளுக்கு இளைஞா்கள் தயாராகும் வகையில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் இணையதளம் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 88836-16177 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் உள்ள நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கென வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.